Editorial / 2020 மார்ச் 26 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோய்க்கிருமி தொற்று பரவும் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மார்ச் (27) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மார்ச் (30) திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு அதே தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
இன்று காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மார்ச் (30) திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு அதை தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் நேரங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு என்பவற்றை வீடுகளில் இருந்தவாரே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் சம்பந்தமான இந்த நேரம் மற்றும் காலம் அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை அமுலில் இருக்கும்.
5 minute ago
21 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
5 hours ago