2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து தடை

Editorial   / 2020 ஜூலை 08 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில், இன்று(08) காலை ரயில் கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.50 வவுனியா ரயில் நியைத்திலிருந்து கடுகதி ரயில் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் ஈரப்பெரியகுளம் பகுதியில் ரயில் பாதையை  விட்டு தடம் புரண்டு  இரண்டு கிலோ மீற்றர் தூரம் ரயில் பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளன .

இச்சம்பவத்தினால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் தடம் புரண்ட பெட்டிகளை  ரயில் பாதையில் விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது 

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--