Editorial / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தனது பதவையை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள ஊடகமொன்று, இன்று (05) வௌியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா செய்வதே ஆகும் என, ஜனாதிபதி அவருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
56 minute ago
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago
7 hours ago