Princiya Dixci / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது அப்பா சிறையில் உள்ளதால் தமது குடும்ப வருமானத்துக்காக கச்சான் விற்கும் தொழில் ஈடுபட்டு வருவதாக, யாழ்.நகர் பகுதியில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ள சிறார்கள் தெரிவித்தனர்.
யாழ்.நகர் பகுதியில் சிறார்கள் மூவர் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களிடம் அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
எமது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளதனால் எமது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது.
அதனால் நாம் காலையில் பாடசாலை சென்ற பின்னர் மாலை வேளைகளில் கச்சான் விற்று வருமானம் ஈட்டுகின்றோம். காலையில் அம்மா கச்சான் வறுத்து சிறு சிறு சரையாகக் கட்டி வைத்து இருப்பார். மாலை வேளைகளில் அவற்றை நாம் வீதிகளில் கொண்டு சென்று விற்று வருமானத்தை ஈட்டி வருகிறோம் எனத் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025