2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

நிவ்வெளி தோட்டத்தில் தீ விபத்து

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 28 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

எஸ்.சதீஸ்

நோர்வூட் ,நிவ்வெளி தோட்டத் தொழிற்சாலைப் பிரிவில் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இதில்,12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது. இதனால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளதுடன் அவர்களின் உடமைகளும், முக்கியமான ஆவணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்ததுடன் தீயணைப் படையினர் வருவதற்குள் லயன் குடியிருப்பு முழுமையாக எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் நோர்வூட் பிரதேச சபை ஊடாக செய்யப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .