2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

லிவர்பூலை வென்ற றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலுக்குமிடையிலான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.

றியல் மட்ரிட் சார்பாக, வின்ஷியஸ் ஜூனியர் இரண்டு கோல்களையும், மார்கோ அஸென்ஸியோ ஒரு கோலையும் பெற்றனர். லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றிருந்தார்.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா டொட்டமுண்டுக்குமிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது. சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ றொய்ஸ் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X