2021 மார்ச் 08, திங்கட்கிழமை

உடற்கட்டு சம்மேளனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக மோசடிப் புகார்

Super User   / 2010 செப்டெம்பர் 04 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

இலங்கை உடற்கட்டு வீரர்கள் சம்மேளனத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.

தனது பதவிக்காலம் முடிவடிடைந்த பின்னரும் அவர் இந்த நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக புகாரிடப்பட்டுள்ளது என மோசடிப் புலனாய்வுப் பணியகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சகல அதிகாரங்களையும் மாற்றுவதற்கு முன்னாள் தலைவருக்கு 14 நாள் அவகாசம் இருந்த போதிலும் அவர் அதனைச் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தற்போது புலனாய்வு விசாரணைகள்நடைபெற்று வருகின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .