2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பிக்பாஷில் மெல்பேர்ண் றெனிகேட்ஸ் அணி சார்பாக முத்தையா முரளிதரன்

A.P.Mathan   / 2013 ஜூலை 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிக்பாஷ் லீக் தொடரில் மெல்பேர்ண் றெனிகேட்ஸ் அணி சார்பாக முத்தையா முரளிதரன் மீண்டும் இவ்வருடமும் பங்குபெறவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தைத் தொடர்ந்தும், இவ்வருடமும் முத்தையா முரளிதரன் அவ்வணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
41 வயதான முத்தையா முரளிதரன், கடந்தாண்டு மெல்பேர்ண் றெனிகேட்ஸ் அணி சார்பாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தார். அவ்வணி சார்பாக 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவராகக் காணப்பட்டார்.
 
இந்நிலையிலேயே இவ்வாண்டும் அவ்வணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்ற முத்தையா முரளிதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் புதிதாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சுழற்பந்து வீச்சாளரான பாவத் அஹமட்டுடன் இணைந்து அவர் விளையாடவுள்ளார்.
 
மெல்பேர்ண் றெனிகேட்ஸ் சார்பாக டெஸ்ட் பந்துவீச்சாளர்களான பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.
 
இதில், ஜேம்ஸ் பற்றின்சன் உபாதைக்குள்ளாகி, ஆஷஷ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவ்வுபாதையிலிருந்து குணமாகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிக்பாஷ் லீக் தொடர் எதிர்வரும் டிசெம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--