2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

அன்ரிகுவாவிற்கு எதிராக பார்படோஸிற்கு வெற்றி

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில் பார்படோஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. அன்ரிகுவா அணிக்கெதிரான போட்டியிலேயே பார்படோஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 
பார்படோஸில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
 
துடுப்பெடுத்தாடச் சிரமமான இந்த ஆடுகளத்தில் பார்படோஸ் அணி மெதுவாகவே ஓட்டங்களைப் பெற்றதுடன், இறுதி நேரத்தில் உமர் அக்மலின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக போராடத்தக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
 
துடுப்பாட்டத்தில் பார்படோஸ் அணி சார்பாக சொய்ப் மலிக் 30 பந்துகளில் 33 ஓட்டங்களையும், ஜொனதன் கார்ட்டர் 29 பந்துகளில் 31 ஓட்டங்களையும், உமர் அக்மல் 21 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் அன்ரிகுவா சார்பாக மார்லன் சாமுவேல்ஸ் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஷெல்டன் கொட்டரெல் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கேமர் றோச், டேவ் மொஹமட், டெவோன் தோமஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அன்ரிகுவா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
பார்படோஸ் அணியைப் போன்று ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுக்களை இழந்த அன்ரிகுவா அணி, தேவையான ஓட்டங்களைப் பெறத் தவறியிருந்தது.
 
துடுப்பாட்டத்தில் அன்ரிகுவா அணி சார்பாக ஜோன்சன் சார்ள்ஸ் 37 பந்துகளில் 44 ஓட்டங்களையும், பென் றோஹர் 17 பந்துகளில் 23 ஓட்டங்களையும், மார்லன் சாமுவேல்ஸ் 31 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் பார்படோஸ் அணி சார்பாக ஆஷ்லி நேர்ஸ் 3 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், றயாட் எம்றிட் 3 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், டுவைன் ஸ்மித் 4 ஓவர்களுக்கு 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் நாயகனாக ஷகிப் அல் ஹசன் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .