2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இசைக்கருவிகள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால், மண்டூர்  தம்பலவத்தை மாணிக்கபிள்ளையார் இந்து மன்றத்துக்கு பல்வேறு பொருட்கள் வழங்கும் நிகழ்வு, தம்பலவத்தை பாலர் பாடசாலையில் புதன்கிழமை(6) இடம்பெற்றது.

இசைக்கருவிகள், உலருணவுப் பொதிகள், மாணவர்களுக்கான  புத்தகங்கள், இந்துமத நன்நெறிக்கோவை, பகவத்கீதை என்பன இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், யாழ்.மாவட்ட மோட்டார்  போக்குவரத்து பரிசோதகர் கோ.மதிவண்ணன், மாணிக்க பிள்ளையார் ஆலய பிரதமகுரு ப.கைலாயபிள்ளை, அதன் செயலாளர் க.ஜீவகுமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .