Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள் பற்றி கருத்துப் பகிர்ந்துகொள்ளும் ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பொன்று எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எல்.தேவஅதிரன் தெரிவித்தார்.
மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குறிப்பாக இந்த சந்திப்பில் தற்கொலை நிகழ்வுகளின்போது ஊடக அறிக்கையிடல்கள் மேலும் தற்கொலைகளை ஊக்குவிக்காத வண்ணம் கவனமாகக் கையாளப்படவேண்டியதன் அவசியம்பற்றி வலியுறுத்தும் சமூகப் பொறுப்பபுக்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் என தேவ அதிரன் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
08 Nov 2025