Princiya Dixci / 2016 ஜூலை 20 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் காணாமல் போன மாணவி நேற்று (19) இரவு வீடு திரும்பியுள்ளார் என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 16 வயது மாணவி, கடந்த திங்கட்கிழமை (18) வழமை போன்று பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பாதமையால் மாணவியின் பெற்றோர், காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து மாணவியைப் பொலிஸார் தேடி வந்த நிலையில் குறித்த மாணவி நேற்று (19) இரவு வீடு வந்து சேர்ந்ததாகவும் இது ஒரு கடத்தல் விவகாரமல்ல என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago