2021 மே 06, வியாழக்கிழமை

'சிறுபான்மையினரின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 16 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இந்த நாட்டில் சிறுபான்;மையினரின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக ஒரேயொரு கோரிக்கையை முன்வைத்து மண் மீட்புப் போராட்டம் இடம்பெற்றதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
 
சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகளை நிராகரிப்பதில் பெரும்பான்மையினர் வெற்றி அடையும் அரசியல் முறை இனியும் இருக்கக்கூடாதெனவும் அவர் கூறினார்.
 
ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாடு சுதந்திரமடைந்தது முதல் இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் ஆட்சியாளர்களினால் நிராகரிக்கப்பட்டு வந்தது. தமிழ் மக்களின் அரசியலில் 65 வருடங்கள் கடந்தபோதிலும், முஸ்லிம் மக்களின் அரசியல்; 30 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில் கோரிக்கை அரசியலில் நிற்பதை நாம் பார்க்கிறோம். எந்த அரசாங்கமாகவிருந்தாலும், சிறுபான்;மை மக்களின் கோரிக்கைகள் அரசியல் தோல்வியடைந்து வருகிறது' என்றார்.
 
'ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக் அரசாங்கத்திலும் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. இதனாலேயே ஒரேயொரு கோரிக்கையை முன்வைத்து இந்த நாட்டில் மண் மீட்புப் போராட்டம் இடம்பெற்றது.
 
இந்த நாட்டிலுள்ள சிறுபான்மைச் சமூகமோ அல்லது பெரும்பான்மைச் சமூக இளைஞர்களோ இன்னுமொரு வன்முறை அரசியலை மீண்டும் ஆரம்பிக்காத வகையில் பாதுகாப்பது மூவினத் தலைவர்களின் பொறுப்பாகும்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .