2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை மறைந்து வைத்திருந்த நபர் கைது

Gavitha   / 2016 ஜூலை 21 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாடசாலை மாணவியொருவரை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குடும்பஸ்தர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்றுப் புதன்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை, கோழி இறைச்சிக்கடை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய எம்.முகம்மட் பர்ஸாத் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த திங்கட்கிழமை (18) காத்தான்குடியைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவி, பாடசாலைக்குச் சென்று மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்திருந்தனர்.

எனினும் குறித்த மாணவி அடுத்தநாளான செவ்வாய்க்கிழமை (19) காலை தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

குறித்த மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்நபர், ஏற்கெனவே திருமணமானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X