Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 13 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவதும் கிழக்கு மாகாண சபையின் எண்ணமாகும் என மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை பிரதான காரணியாகும் எனும் தலைப்பில் பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடைபெற்ற உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'உலகில் முதல் தர விருந்தோம்பல் துறைசார் பயிற்சிகளை இளைஞர், யுவதிகளுக்கு வழங்குவதற்கான பயிற்சி நிலையத்தை புல்மோட்டை முதல் பாசிக்குடா வரையிலான கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் சுற்றாடலைப் பாதிக்காத வகையில் அமைப்பதற்கு எண்ணியுள்ளோம். இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். கடந்த 30 வருட யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரத்தை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் பெருக்கலாம்.
அரசியலில் அர்ப்பணிப்பு, கொள்கை மாறாத திட்டங்கள், சமூக, பொருளாதார மற்றும் புவியியல்சார் துறைகள் மூலம் சுற்றுலாத்துறையை பெருக்குவது சாத்தியமாகலாம்.
சுற்றுலா உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அமைதியான சக வாழ்வுடன் கூடிய பல்சமய, சமூகங்கள் ஒன்றிணைவதனால் உலகில் சுற்றுலாத்துறையினர் வந்து சேரும் கேந்திர நிலையமாக கிழக்கை மாற்ற முடியும். இதற்காக மாகாண அமைச்சுக்;கு மத்திய அரசு உதவி ஒத்தாசைகளைப் புரிய வேண்டும்' என்றார்.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago