Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதியாக சிறையில் 27 வருட காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை வாசியான செல்லப்பிள்ளை மகேந்திரன் (வயது 46) என்பவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.
மகஸின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், நீரிழிவு நோய்க்குள்ளான மகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மரணமானார்.
1993ஆம் ஆண்டு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்பட்டு, இறக்கும் வரை அரசியல் கைதியாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறைக் கைதியின் சடலம், சிறைச்சாலை நிருவாகத்தால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான முறக்கொட்டான்சேனைக்கு எடுத்து வரப்பட்டு, சனிக்கிழமை (04) அடக்கம் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago