Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் தீர்வை வென்றெடுப்பதில், பெரும்பான்மையினத் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், தமிழர் தரப்பிலிருந்தும் திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறீகாந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆனைப்பந்தியிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தில், நேற்று (15) மாலை நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்வதில் முனைப்புக்காட்டும் தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வையும் முன்வைப்பதும் இல்லை என்றும் வெளிப்படுத்துவதும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
அரசியல் தீர்வு என்பது, இலகுவானதல்ல என்று கூறிய அவர், தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை காணப்படவேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறைகூறும் சிலர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக தங்களால் என்ன செய்யமுடியும் என்று, இதுவரைக்கும் தெரிவித்ததில்லை; முயன்றதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, அரசியல் தீர்வுத்திட்டம் இழுத்தடிக்கப்படக்கூடாது என்றும், இந்த ஆண்டுக்குள் அது வழங்கப்படவேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்துவதாகவும்,இந்த முயற்சிகள் தோல்விகாணுமாக இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டாகத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago