Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை (20) காலை 09 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு, வடக்கு, கிழக்கு பூராகவும் நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான இந்த நிகழ்வு, மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 27 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
5 hours ago