2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நித்திரையிலிருந்த பெண் மீது வாள்வெட்டு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 மார்ச் 04 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில், தூக்கத்திலிருந்த குடும்பப் பெண்  மீது  வாள் வெட்டுத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், அப்பெண் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (03)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் கணவர், மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதால், தனது பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்பில் இவர் வசித்து வந்துள்ளாரென, ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு தாயும் மூன்று பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்தவேளையில், வீட்டின்  கூரைவழியாக ஓடுகளைக் கழட்டிக்கொண்டு வீட்டினுள் இறங்கிய மர்ம நபர், உறக்கத்திலிருந்த பெண்ணைக் கூரிய கத்தியால் தலையிலும் கையிலும் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X