Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இம்முறை பருவமழை பொய்த்துப் போன நிலையில், வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்;; சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நெற்பயிர்களும் குறிப்பிடத்தக்க அளவான உப உணவுப் பயிர்களும் கருகியுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், இன்று (15) தெரிவித்தார்.
இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வருடம் மட்டக்களப்பில் 91 ஆயிரத்து 567 ஏக்கரில் மானாவாரி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 10 சதவீதமானவை ஏற்கெனவே கருகி விட்டன. ஏனையவையும் மழை வீழ்ச்சி கிடைக்காமையால் கருகும் நிலைமை காணப்படும்.
இதேவேளை உப உணவுப் பயிர்களான சோளம், இறுங்கு, கௌப்பி, நிலக்கடலை, குரக்கன் போன்றவையும் பாதிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இம்மாவட்டத்தில் வாகரை, கிரான், வந்தாறுமூலை, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, பழுகாமம் ஆகிய நெற்செய்கைக் கண்டங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago