Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 25 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
யுத்தத்தினாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பெருமளவில் உள்ளடக்கிய மட்டக்களப்பு மேற்கு வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புலமை பரிசில் முன்னோடிப்பரீட்சை மற்றும் மீட்டல் வகுப்புக்கள் கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் கே.சத்தியநாதன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட இப்பரீட்சையில் 1435 மாணவர்கள் தோற்றி நன்மையடைந்தனர். இவ்வலயப் பகுதி மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கிலேயே வலயக் கல்விப் பணிமனை இச் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிதியத்தின் ஸ்தாபகருமான கவீந்திரன் கோடீஸ்வரன் நேரில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தார்.
வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.கரிகரன் தலைமையில் நடைபெற்ற பரீட்சையினை அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், மட்டக்களப்பு உயர் தொழினுட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனுசியா, தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ.ஜெயகரன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டதுடன் வினாப் பத்திரங்களுக்கான புள்ளிகளை உடன்திருத்தி வழங்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் 28 ஆம் திகதி திருக்கோயில் வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .