Editorial / 2017 ஜூன் 03 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்படாததை கண்டித்தும் உடனடியாக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைத்து விசாரணையை துரிதமாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால், இன்று பிற்பகல் 04 மணிக்கு, காந்தி பூங்கா முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளராக இருந்து ஊடகத்துறையினை சிறந்தமுறையில் மேற்கொண்டுவந்த ஐயாத்துறை நடேசன், சுட்டுக்கொல்லப்பட்டு 13 வருடங்களை கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில், இன்றைய ஆட்சியாளர்களும் அதேபாணியில் இருந்துவருவது கவலைக்குரியதாகும்.
இலங்கையில் கடந்த காலத்தில் சிங்கள ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பிலும் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பிலும் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரையில் ஒரு தமிழ் ஊடகவிலாளர் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பிலும் தாக்கப்பட்டது தொடர்பிலும், இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமை கவலையளிப்பதாகவுள்ளது.
இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணை இதுவரையில் ஆரம்பிக்கப்படாததை கண்டித்தும் உடனடியாக விசேட பொலிஸ் குழுவொன்றினை அமைத்து விசாரணையை துரிதமாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நடவடிக்கையினை எடுத்துவருகின்றது.
இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில், சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளை சார்ந்தோரை வருகைதந்து ஆதரவு வழங்குமாறும் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
13 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
11 Jan 2026