2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மட். மெதடிஸ்த மத்திய கல்லூரியின நினைவுமலர் வெளியீடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கே.எல்.ரி.யுதாஜித்

202 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202ஆவது ஆண்டு கல்லூரி தினம், 200ஆவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு  ஆகிய நிகழ்வுகளில் மட்டக்களப்புக்கு  ஜனாதிபதி   மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது இப்பாடசாலையின் ஆரம்ப கர்த்தாவும் நிறுவுனருமான  வில்லியம்ஸின் நினைவாகவும் 2002ஆவது ஆண்டு நினைவாகவும் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிதியில் அமைக்கப்பட்ட  தூபியினை ஜனாதிபதி திரைநீக்கம் செய்துவைத்தார்.  அத்துடன், 200ஆவது ஆண்டு நினைவுமலரின் முதல் பிரதியினை ஜனாதிபதியிடம் பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.பிவிமல்ராஜ்  வழங்கிவைத்தார்.  

அதனையடுத்து பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன், ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்து,  நினைவுச்சின்னமும் வழங்கினார்.  வைக்கப்பட்டது.

மேலும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளத்தினையும் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X