2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்கள் மீது தாக்குதல்

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இனந்தெரியாத 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று (24) இரவு 8.30 மணியளவில் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி 5 ஐச் சேர்ந்த அல்- ஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எல்.எம்.அர்ஷாத் (வயது 18) மற்றும் ஏ.எம்.எம். ஹஷீப் (வயது 17) ஆகியோரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த மாணவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவிலெயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு  மாணவர்களும் வீதியால் வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று கைகளால் தாக்குதல் நடத்தி, பிறிதொரு மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த மறைவிடத்தில் வைத்து தம்மை இரவு 11 மணி வரை போத்தலாலும் கைகளாலும் தாக்கியதாக பொலிஸ் வாக்கு மூலத்தில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X