2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மீராகேணி மத்திய மருந்தகம் தரம் உயர்வு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு பிரிவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (14) நடைபெற்றபோது, இதற்காக மாகாண சபை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு இறக்காமத்தின் வாங்காப் பிரதேசத்தில் மத்திய மருந்தகத்தை புதிதாக ஆரம்பிப்பதற்கும் கிழக்கு மாகாண சபையின்  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .