2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

யானைகளின் தாக்குதல்கள் காரணமாக 3 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யானைகளின் அட்டகாசம் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  பன்சேனைக் கிராமத்தில்; ஒரு வீடும் நல்லதண்ணிஓடைக் கிராமத்தில்; ஒரு வீடும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, விளாவடிவட்டைக் கிராமத்தில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நல்லதண்ணிஓடைக் கிராமத்திலுள்ள வீடொன்றை உடைத்த யானை,  அங்கு சிறுபோகச் செய்கைக்காக வைக்கப்பட்டிருந்த விதைநெல்லை உட்கொண்டுள்ளது. அத்துடன், பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X