2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி ஒருவர் காயம்

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை,தும்பாலை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை யானை தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தும்பாலை காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கே.ராஜ்குமார்(45வயது)என்பவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கிலக்காகி படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .