2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ரணவிரு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித், எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையின் ஏற்பாட்டில் ரணவிரு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற ரணவிரு தின நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை முன்னால் இறந்த பொலிஸாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவு தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

யுத்தகாலத்தில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் இறந்த பொலிஸாரின் உறவினர்கள் தமது உறவுகளுக்காக மலரஞ்சலி செலுத்தினர்.பெருமளவிலான தமிழ் முஸ்லிம் மக்கள் பங்குகொண்டனர்.

பொலிஸாரின் அணவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X