2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவு வைபவம் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிறுவனத்தின் போசகரும் காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளருமான எம்.ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதி மேயர் ஏ.ஜோர்ஜ் பிள்ளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராசா, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றமழான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்நிறுவன அங்கத்தவர்களின் ஒன்று கூடல் இடம்பெற்றதுடன் இவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .