2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபருக்கு பொலிஸார் வலைவீச்சு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ரி.எல்.ஜௌபர்கான்)


15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பவதியாக்கிய நபரை வவுணதீவு பொலிஸார் தேடிவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவு பாவற்கொடிச்சேனை பாடசாலையின் மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளான சம்பவத்தின் சூத்திரதாரி பொலநறுவையில் தொழில் செய்து வருததாகவும் விரைவில் கைது செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மாணவி கர்ப்பமடைந்ததன் பின்னரே அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி குறித்த காலப்பகுதியில் பாடசாலைக்குச் செல்லவில்லையெனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X