2021 ஜனவரி 20, புதன்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினம்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், எப்.எம்.பர்ஹான், கே.எஸ்.வதனகுமார், சிஹாரா லத்தீப)


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டத்தில் நடைபெற்றது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளரும் விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான சுபா சக்கரவர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி திருமதி கனகா சிவபாத சுந்தரம், மட்டக்களப்பு இராம கிருஷ்னமிஷன் தலைவர் சுவாமி கபாலிஸ்வரானந்தா ஜீ, சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பேரணி இடம்பெற்றதுடன் மூன்று இடங்களில் இருந்து வந்த பேரணி மட்டக்களப்பு நகரில் ஒன்று சேர்ந்து மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது.

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினம் இலங்கையில் 150க்கு மேற்பட்ட இடங்களில் நடத்துவதற்கு இந்து ஸ்வயம் சேவக சங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் ஜனன தினம் கொண்டாடப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .