Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ், சக்திவேல்)
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசியலில் பெண்களின் பிரவேசத்தையும் பங்களிப்பினையும் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளததாக சீடோ ஸ்ரீலங்கா அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட குழுத் தலைவர் திருமதி சரவணன் கமலராணி தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசியல் உருமாற்றத்திற்கான பெண்களின் வலையமைப்பு எனும் தொனிப்பொருளில் சீடோ ஸ்ரீலங்கா அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாற் கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தல்களில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் சுமார் 200 பெண்களை அரசியலில் ஈடுபடுத்தும் செயற்றிட்டத்தை எமது அமைப்பு எடுத்து வருகின்றது. 42 உள்ளுராட்சிமன்ற தொகுதியிலும் ஒவ்வொரு பெண்ணாவது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.
இதற்கு அமைய அதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்து குறைந்தது 200 பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கான அரசியல் பயிற்றுவித்தல்கள், அரசியல் தலைவர்களுடனான அனுபவ பகிர்வுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான பல திறன் விருத்திகளையும் மேற்கொள்ளவுள்ளளோம் என்றார்.
இக்கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எ.எல்.எம்.ஸினாஸின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள மாதர் சங்க உறுப்பினர்கள், சீடோ ஸ்ரீலங்கா அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரவிச்சந்திரனும் கலந்துகொண்டார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago