2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வவுணதீவு கிராமிய வைத்தியசாலையில் நீர் தட்டுப்பாட்டை தீர்க்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பகுதியான வவுணத்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி அரசினர் கிராமிய வைத்தியசாலையில் பாவனைக்கான நீர்வசதி பெரும் குறையாக அமைந்து வருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையிலுள்ள கிணற்றில் நீர் குறைவாகக் காணப்படுவதனால் வைத்திய பணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் இதற்கு விரைவான தீர்வினை பெற்றுத்தருமாறு இப்பிரதேசத்திற்கு வருகை தந்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் வீ.நடராஜ கோரிக்கை விடுத்தார்.

இங்கு வருகைத்தந்த பிரதி அமைச்சர் முரளிதரனிடம் இவ்வைத்தியசாலை மக்கள் பயன்படுத்தும் பாதையும் மிகவும் மோசமாக பாவனைக்குதவாத நிலையில் இருப்பதாகவும் இதனைத்திருத்தித்தர நடவடிக்கை எடுக்குமாறும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை நேரில் கேட்டறிந்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் இதற்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாக அங்கு உறுதியளித்ததாக மாவட்ட அரச ஊடகப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.

குறித்த வைத்தியசாலை நோயாளி விடுதிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் இதற்கான தீர்வினை விரைவில் வழங்கிஉவதாகவும் உறுதியளித்ததாக மாவட்ட அரச ஊடகப் பிரிவுத் தலைவர் தெரிவிக்கின்றது. குறித்த வைத்தியசாலை நோயாளி விடுதிகளைப் பார்வையிட்ட பிரதி அமைச்சர் சுமார் 32 இலட்சம் ரூபா செலவில் இவ்வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்டுவரும் மகப்பேறுமனை கட்டிட வேலைகளையும் நேரில் பார்வையிட்டார்.

பிரதி அமைச்சரின் இந்த விடயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் அருமைநாயகம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.கிருஷ்ணானந்த ராஜா வவுணதீவு பிரதேச செயளாலர் கே.வில்வரட்ணமும் சமூகமளித்திருந்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--