2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

வாகரையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று வாகரை, பால்ச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால், இரத்ததான கொடையாளர்களை இணைக்கும் திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகரைப் பிரிவுத் தலைவர் வடிவேல் பிரபாகரன் உட்பட தொண்டர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நான்காவது நிகழ்வு இதுவாகும். தொடர்ச்சியாக பிரதேச ரீதியாகவும், கிராம மட்டத்திலும் இரத்த நன்கொடையாளர்களை இனங்கண்டு இரத்தம் வழங்குதலே இதன் நோக்கமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X