Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேறியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் இன்று வியாழக்கிழமை காலை பகிர்ந்தளிக்கப்பட்டன.
வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற வைபவத்தின்போது கோழி வளர்ப்பு, கால்நடை, சிறுகடை வியாபாரம், விவசாயம் ஆகிய தொழில்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன.
காயங்கேணி, மதுரங்குளம், ஆலங்குளம், கட்டுமுறிவு, வட்டவான், மாங்கேணி, புட்டாங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இப்பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். ஹரிட்டாஸ் எகெட் நிறுவனத்தினால் இந்நிவாரணம் வழங்கப்பட்டதாக நிறுவனத்தின் ஊடக பொறுப்பாளர் எஸ்.மைக்கல் தெரிவித்தார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026