2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மேய்ப்பு பணிச்சபை மாநாடு மட்டக்களப்பில்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மேய்ப்பு பணிச்சபையின்  வருடாந்த மாநாடு மட்டக்களப்பு மன்ரேசா தியான மண்டபத்தில் நேற்று வெள்ளிகிழமை மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது.

இம்மாநாடு நாளை 3ஆம் திகதி வரை நடைபெறும். நேற்று ஆரம்பமான இம்மாநாட்டில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பங்கு ரீதியான, சமூக ரீதியான பணிகள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளவுள்ள  பணிகள் குறித்தும் இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .