Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 01, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைக்கிராமான கெவிளியாமடு கிராமத்திற்கு 25 வருடங்களின் பின்னர் மீள்குடியேறி, விவசாயச் செய்கையில் ஈடுபடச் சென்ற தமிழ் விவசாயிகள் தாங்கள் அங்கு தங்கியிருந்து விவசாயச் செய்கையில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த வருடம் இக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அக்கிராமத்திற்கு மீளத்திரும்பி தமது காணிகளில் பெரும்போக வேளான்மை செய்கையில் ஈடுபட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்த நிலை தற்போது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இப்பகுதியில் மேலும் சட்டவிரோத குடியேற்றங்களும், காணி ஆக்கிரமிப்புகளும் தொடருகின்றன என்றும் அங்குள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரை தங்கியிருந்து விவசாயச் செய்கையில் ஈடுபட முடியாத காரணத்தினால் காலையில் வயலுக்குச் சென்று மாலையில் வீடுதிரும்புவதாக கூறும் தமிழ் விவசாயிகள், இப்படியான நிலை தொடருமானால் அங்கு மீளக்குடியேறுவதற்கோ விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கோ வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்படுமென தமது அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இவ்விடயத்தை தான் முன்வைக்கப்போவதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago
1 hours ago
6 hours ago