Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவுத் இன்று கலந்து கொண்டார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரையான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற எந்தவொரு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் அவர் பங்கு கொள்ளவில்லை அதே போன்று புதிய அரசாங்கத்தின் பல கூட்டங்களில் பங்குகொள்ளாத பசீர் சேகு தாவுத் இன்று கலந்து கொண்டிருந்தமை அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த 18ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கி வாக்களித்ததையடுத்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026