2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அரசியல் உருமாற்ற செயற்பாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவ அபிவிருத்தி கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

சீடோ ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் உருமாற்றத்திக்கான அபிவிருத்தி செயற்பாடுகளில் பெண்களது பிரதிநிதித்துவத்தை அபிவிருத்தி செய்வதற்கான கருத்தரங்கு ஒன்று,  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பொது நூலக மண்டபத்தில் மட்டு. மாவட்ட இணைப்பாளர் எ.எல்.சினாஸ் தலைமையில் நடத்தப்பட்டது.

2011இல் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தமது வேட்பாளர் பத்திரத்தில் குறைந்தது ஒரு பெண்ணிற்காவது சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அதற்காக பெண்களை தயார்படுத்துவதற்குமான முதலாவது கருத்தரங்காக இந்த நிகழ்வு இடம்பெற்றதாக அதன் இணைப்பாளர் சினாஸ் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .