2021 மார்ச் 04, வியாழக்கிழமை

வீடு தீப்பற்றி எரிந்து நாசம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுக்ரி)

ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ராஜதுரை கிராமத்தில் இவ்வீடு மின்சார ஒழுக்கின் காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதையடுத்து, அங்கு கூடிய பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், இவ்வீடு முற்றாக எரிந்துள்ளதுடன் அங்கு இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து அழிவடைந்துள்ளன.
 
மின்சார ஒழுக்கின் காரணமாகவே இவ்வீடு தீப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .