2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மாணவியை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

நான்காம் ஆண்டில் கல்விகற்கும் மாணவியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அமைந்துள்ள அல்-ரஹீமியா வித்தியாலய அதிபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

மேற்படி வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியொருவரை உடற்பயிற்சி செய்யும் வேளையில் பிரம்பால் தாக்கியமையால் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அச்சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்ததைத் தொடர்ந்து மேற்படி வித்தியாலய அதிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட அதிபரை நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே 14 நாட்கள் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிபரின் கைதினை தொடர்ந்து அக்கரைபற்று பிரதேசத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அஸாரினை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் தொடர்பாக எதனையும் கூறமுடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .