Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.லோஹித்)
ஆசிரியர்களுடைய சம்பளப்பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகின்றனது. அவ்வாறான பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தீவிரமான செயற்பாடுடைய இது போன்ற சங்கங்கள் வசியமானதாகும் என மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் இன்று காலை முதல் நடைபெற்ற இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் மகளிர் அணியினருக்கான கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர், "கல்வி நிருவாக சேவையிலுள்ளவர்களின் குறைபாடுகளைக் கூடத் தட்டிக் கேட்கின்ற ஆசிரியர் சங்கம் மாறவேண்டும். அதற்கமைவாக மகளிர் வலையமைப்பும் கட்டிடியழுப்பப்பட வேண்டும். ஆசிரயர் சங்கங்கள், வலையமைப்புகள் மிக முக்கியமானவை.
ஆசிரியர்கள் தரமான கற்பித்தலினூடாக தங்களையும் தரமானவர்களாக மாற்றிக் கொள்ள மகளிர் வேண்டும். அத்துடன் சிறந்த கல்வி நிருவாகிகள் உருவாக வேண்டும்.
கடந்த கால யுத்தம் காரணமாக நாம் அதிகம் இழந்துள்ளோம். அவ்வாறான இழப்புகளை ஈடு செய்யும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்றார். நோர்வேயின் எடியூகேசன் இன்ரர் நெசனல் கல்வியாளர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க வலையமைப்புடன் இணைந்து இந்த ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தரத் தேசிய பாடசாலை அதிபர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார். வளவாளர்களாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க மகளிர் வலையமைப்பு செயலாளர்களான திருமாதி யூ.யோகேஸ்வரன், திருமதி எஜ்.எஸ்.இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணித்தலைவி திருமதி எஸ்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் ஏற்பாடுகளை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் முருகு தயானந்தன் மேற்கொண்டிருந்தார்.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago