2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

டெய்லிமிரர் பத்திரிகைக்கு மட்டக்களப்பில் பாராட்டு

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு உன்னிச்சையில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில்,  தமிழ் மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லிமிரர் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டது.

உன்னிச்சையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கும் வைபவம் நேற்று நடைபெற்றபோது அதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கெப்ரால், பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. கருணாரத்ன உட்பட பலர் பங்குபற்றினர்.

அவ்வைபவத்தில் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. கருணாரத்ன உரையாற்றுகையில்,  உன்னிச்சை மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை வெளிக் கொணர்ந்தமைக்காக டெய்லி மிரர் பத்திரிகைக்கு நன்றி தெரிவித்தார்.

அதேவேளை, இவ்வைபவத்தில் உரையாற்றிய உன்னிச்சை விசேட அதிரடிப்படைமுகாம் பொறுப்பதிகாரி ரத்னமால , உன்னிச்சை மக்களின் அவலம் குறித்து டெய்லி மிரர் பத்திரிகையில் கெலும் பண்டார எழுதிய கட்டுரையொன்றைத் தொடர்ந்தே உன்னிச்சை பகுதியை அவசரமாக அபிவிருத்தி செய்யவேண்டுமென எண்ணி மத்திய வங்கி பிரதி ஆளுநருடன் தான் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரிக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார், "அவர் பாதுகாப்பு விவகாரங்களுடன் மாத்திரம் நின்று விடாமல் பிரதேசத்தில் கஷ்டப்படும் மக்கள் குறித்தும் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்" என பிரதியமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .