2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சுனாமி முன்னெச்சரிக்கை; மட்டக்களப்பின் கரையோர பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்  அனர்த்த நேரகால முன்னெச்சரிக்கை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கடற்கரை அண்டிய பகுதியான புதிய காத்தான்குடி கிழக்கு கிராமத்தில் நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவரும் காத்தான்குடி பிரிவின் தலைவருமான எம்.எஸ்.எம்.அப்துல்லா மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.உமர்லெவ்வை இலங்கை செஞ்சிலுவைச் சங்க அனர்த்த நேரகால முனெனெச்சரிக்கை வேலைத்திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் இர்சாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தாஹீர் உட்பட அதன் தொண்டர்கள் இதில் கலந்த கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--