Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
சமூகத்தை மையப்படுத்தி ஒழுக்கமான நிர்வாகத்தினூடாக தொழிற்பயிற்சி நிலையத்தினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முதலமைச்சர் என்ற வகையில் அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்க இலங்கை மிசன் திருச்சபையின் ஊறணி தொழிற்பயிற்சி நிலைய பணிப்பாளர் சபையிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஊறணி தொழிற்பயிற்சி நிலையமானது கடந்த சில மாதகாலமாக நிர்வாக சீர்கேடு காரணமாக செயலிழந்து காணப்படும் நிலையில் சர்வதேச பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், பல பயிற்சிநெறிகளும் நிறுத்தப்படவேண்டிய நிலையிலுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இன்று புதன்கிழமை காலை முதலமைச்சர் இந்நிலையத்திற்கு விஜயம் செய்து பயிற்சி நிலையத்தை பார்வையிட்டதுடன், அங்கு நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
பணிப்பாளர் சபைத் தலைவர் எ.ஜெயக்குமாரன் தலைமையில் நடைபெற்ற பணிப்பாளர் சபையில் பிரச்சினைகளை கேட்டறிந்த முதலமைச்சர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறானதொரு சிறந்த பாரிய தொழிற்பயிற்சி நிலையமிருப்பது இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு கிடைத்த ஒரு வரமாகவுள்ளது.
இந்நிலையத்தினூடாக கடந்த காலங்களில் வருடாந்தம் 250 முதல் 300 வரையான இளைஞர் யுவதிகள் தொழிற்பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர். தொடர்ந்து சுயமாக இயங்கி சுமார் 300 பேரை வெளியேற்ற என்ன முறைமையை ஏற்படுத்தலாமென்பது தொடர்பில் சரியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரசியல் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி வறுமையை ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகளை கையாள வேண்டுமோ அவற்றை முன்னெடுக்க வேண்டும். இந்நிலையமானது வறுமையில் வாடும் இளைஞர், யுவதிகளை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் ஆரம்ப இடமாகவுள்ளதினால் இவற்றின் சிறந்த செயற்பாடு உணரப்படுகின்றது. இங்குள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையினால் பயனடைகின்ற எமது சமூகம் பாதிப்படையக் கூடாது.
சமூகத்தை மையப்படுத்தி ஒழுக்கமான சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனூடாக சிறந்த சேவையினை ஆற்றவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். இல்லாவிட்டால் முதலமைச்சர் என்ற வகையில் இப்பயிற்சி நிலையத்தினை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய நிலையேற்படலாம் என்றார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
Angeline Shandrakumar Sunday, 21 November 2010 12:25 AM
இந்த தொழில்நுட்ப கல்லூரி முன்னேற வேண்டுமானால் "பதவியாசை", "பொருளாசை", "சுயநலம்" என்ட தமிழனின் குணங்கள் இன்றி, பெரும் தன்மையுடன் "எங்கள் வசதி இல்லாத மாணவர்களை முன்னேட்ட வேண்டும்" என்ற ஒரு பொது நல நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.
யாழ்பன்னைதில் இருந்து நேற்று வந்தவர்கள்ளுக்கு "நாங்கள் பெரியவர்கள், மட்டகளப்பான் சிறியவன்" என்ட மனபாங்கு நீங்கி பொது நலத்துடன் இதனை அன்னுஹவேன்டும், அதிலும் கடவுளுக்கு சேவை செய்ய வந்தவர்கள் முன்மாதிரியாக இர்ருக்கவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago