Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிலிசுறு வேலைத்திட்டத்தின் கீழ், எழில்மிகு சுற்றாடலாக மாற்றுவதற்கு காத்தான்குடி நகரசபைப் பிரிவில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி நகரசபைத் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தலைமையில், இதற்கான ஆலோசனைக்கூட்டம் காத்தான்குடி பொதுநூலக கேட்போர்கூடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டன.
குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கு ஏற்ற இடங்களும் பார்வையிடப்பட்டன.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் ஜயவினாந் பெர்னாண்டோ, பிரதி திட்டப்பணிப்பாளர் சந்துறு மல்வன, நகரசபையின் செயலாளர், உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்களெனப் பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
7 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025