Suganthini Ratnam / 2011 ஜனவரி 09 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனையிலுள்ள தனியார் வர்த்தகம் நிலையம் நேற்று சனிக்கிழமை இரவு உடைக்கப்பட்டு உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதேவேளை, காயமடு அரச தமிழ்க் கலவன் பாடசாலையில் நீர்த்தாங்கியில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரமொன்று கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும், மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
44 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
11 Jan 2026