2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வை.எம்.சி.ஏ. யின் உலர் உணவுப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள 10 நலன்புரி நிலையங்களுக்கு இலங்கை தேசிய வை.எம்.சி.ஏ.யின் உதவியுடன் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ. அமைப்பினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொருட்கள் நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை மாலை வழங்கப்பட்டன.  உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ யின் தலைவர் மா.மரியபாலன், செயலாளர் ஆ.அமிர்தலிங்கம் உட்பட நிர்வாக பை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளத்தினால் வாழைச்சேனை பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X