Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் பாடசாலை செய்றபாடுகளுக்கும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்குமான தேவைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கேட்டுள்ளார்.
கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள அச்சுறுத்தல் மற்றும் மக்களது தேவைகள் குறித்து கண்டறிய அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சென்றிருந்தனர்.
அதனையடுத்து மக்களது முக்கிய தேவைகள் குறித்து முன்னுரிமைப்படுத்தப்பட்ட பட்டியலின் அடிப்படையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.தற்போது கிழக்கில் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். சில பாடசாலைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருந்த போதும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பைகள் உள்ளிட்ட ஏனைய உபகரணங்கள் தேவைப்படுகின்றது.
எனவே தற்போது நாட்டின் நாளா பாகங்களிலும் உள்ள மக்கள் கிழக்குக்கு தேவையான பொருட்களை அனுப்பிவருகின்றனர். அதனோடு பாடசாலை உபகரணங்கள் என்பனவற்றையும் அனுப்புவதற்கு நிறுவனங்கள் ஆக்க பூர்வமான நடவடிக்கையெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் வேண்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago