2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் சேதமடைந்த பாலங்கள், வீதிகள் புனரமைப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைக்கப்படுகின்றன.

வெல்லாவெளி மண்டூர் வீதியில் உள்ள வெள்ளளைப்பாலம்,  கறுத்தபாலங்களுக்கான  புனரமைப்பு வேலைகளை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் வீதி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ரி.தருமரெட்ணம் ஆகியோர் நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டதுடன் புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றம் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

இதேவேளை வெள்ளத்தினால் சேதமடைந்த  படுவான்கரை வீதியின் புனரமைப்பு வேலைகள் குறித்தும் மக்களின் போக்குவரத்து சிரமத்தினை தவிர்ப்பதற்கு  விரைவான நடவடிக்கைகள் எடுப்பதுக் குறித்தும் மாகாண பணிப்பாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--